இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் பேச்சு

இந்திய பெருங்கடல் பேச்சுவார்த்தை உள்பட இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கும் இந்த உரையாடலின் போது வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-11-01 22:00 GMT

photo Crdit: PTI

வாஷிங்டன்,

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த தொலைபேசி உரையாடலின் போது, பிராந்திய பாதுகாப்பு நிலவரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், உலக அளவிலும் நிலைத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி பேசினர்.

இந்திய பெருங்கடல் பேச்சுவார்த்தை உள்பட இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு இருவரும் வரவேற்பு தெரிவித்தனர். சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம்சாட்டிய நிலையில், இந்திய-அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.  இந்தியா - கனடா இடையேயான மோதல் போக்கு தொடர்பாகவும்  இருவரும் விவாதித்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

கனடாவில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலின் பின்னணியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இருப்பதாக கனடா வெளியுறவுத்துறை மந்திரி டேவிட் மோரிசன் சமீபத்தில் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா, கனடா கூறிய குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது எனவும் இது தொடர்பாக அந்த நாட்டுடன் ஆலோசனை நடத்துவோம்'' என்று கூறியது.அமெரிக்காவின் இந்த கருத்து இந்தியாவுக்கு அதிருப்தியை கொடுத்தது. இத்தகைய சூழலுக்கு இடையேதான், இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசர்களுடம் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்