நீட் முறைகேடு - எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை 1ம் தேதி வரை ஒத்திவைப்பு

நீட் முறைகேடு தொடர்பாக மக்களவையில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.;

Update: 2024-06-28 06:59 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனை அடுத்து, மேல்சபையின் 264வது கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று ஜனாதிபதி உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கின. ஜனாதிபதி உரை முடிந்த உடன் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில், நீட் முறைகேடு தொடர்பாக உடனே விவாதம் நடத்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினர். மேலும் ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு முன் நீட் பிரச்சினை பற்றி பேச வேண்டும் என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்ததால் மக்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக  மக்களவை  12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் 12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மக்களவையை வரும் 1ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்