மோடி இல்லத்தில் தேநீர் விருந்து: பங்கேற்ற எம்.பிக்கள் யார், யார்?

மோடியுடன் மந்திரிசபை உறுப்பினர்களும் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-06-09 07:46 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறுகிறது.

இன்று மோடியுடன் மந்திரிசபை உறுப்பினர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து அளிக்கபட்டது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலான எம்.பி.க்கள் மந்திரிசபை உறுப்பினர்களாக பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இன்று பதவியேற்க வாய்ப்புள்ள மந்திரிகளின் பெயர் பட்டியல் பின்வருமாறு;-

* நிதின் கட்கரி

* ராஜ்நாத் சிங்

* பியூஷ் கோயல்

* ஜோதிராதித்ய சிந்தியா

* கிரண் ரிஜிஜு

*எச்.டி.குமாரசாமி

* சிராக் பாஸ்வான்

* ராம் நாத் தாக்கூர்

* ஜிதன் ராம் மஞ்சி

* ஜெயந்த் சவுத்ரி

* அனுப்ரியா பட்டேல்

* ராம்மோகன் நாயுடு

* சந்திர சேகர் பெம்மாசானி

* பிரதாப் ராவ் ஜாதவ்

* சர்பானந்த் சோனோவால்

* ஸ்ரீனிவாஸ் வர்மா

* ரவ்னீத் சிங் பிட்டு

மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஜே.பி.நட்டா, அமித்ஷா, மனோகர் லால் கட்டார், ஜோதிராதித்ய சிந்தியா, சிவராஜ் சிங் சவுகான், அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரும் மோடியின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இன்று மந்திரிசபை உறுப்பினர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்