மராட்டியம்: பழைய பகை காரணமாக 5 பேர் கொண்ட குழுவால் இரண்டு சகோதரர்கள் கொலை

மராட்டிய மாநிலத்தில் பழைய பகை காரணமாக இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்டனர்.;

Update:2025-03-20 18:18 IST
மராட்டியம்: பழைய பகை காரணமாக 5 பேர் கொண்ட குழுவால் இரண்டு சகோதரர்கள் கொலை

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் உமேஷ் ஜாதவ் (32). இவரது சகோதரர் பிரசாந்த் ஜாதவ் (30). இவர்களை நேற்று இரவு 9.30 மணியளவில் 5 பேர் கொண்ட குழு கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்கினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சகோதரர்கள் இருவரும் கீழே சரிந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே உமேஷ் ஜாதவ் மற்றும் பிரசாந்த் ஜாதவ் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சகோதரர்கள் இருவரையும் தாக்கிய கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் சாகர் கரட், அனில் ரெடேகர், சச்சின் ரெடேகர், யோகேஷ் ரோக்டே மற்றும் அவினாஷ் என்ற சோனு உஷையர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய பகை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்