மனைவியுடன் கடும் வாக்குவாதம்...அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக கடும் வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.

Update: 2024-12-09 05:32 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சிட்டி கோட்வாலி பகுதியின் மொஹல்லா சத்திபுராவில் வசித்து வந்தவர் மகேந்திர குமார் (33). அவரது மனைவி மீரா. இருவருக்கும் அருண் (7), விவேக் (5) மற்றும் அர்ச்சனா (2) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளாது.

இந்நிலையில், நேற்று மாலை குமாருக்கும் அவரது மனைவிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த குமார் தனது மனைவியின் தலையை கல்லால் நசுக்கி அடித்துள்ளார். இதில் மீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மீரா இறந்த பிறகு, குமார் அந்த அறையை பூட்டிவிட்டு தனது மூன்று குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். வெகுநேரமாக யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான குமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்