மத்திய பிரதேசம்: பேருந்து மீது லாரி மோதி விபத்து - 6 பேர் பலி
விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.;
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து நாக்பூருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நாடன் டெஹாட் காவல் நிலையத்திற்கு பேருந்து அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து கயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.