கேரளா: திருச்சூரில் ரிக்டர் 3.0 அளவில் லேசான நிலநடுக்கம்
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் ரிக்டர் 3.0 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கன்னம்குளம், எருமாப்பட்டி மற்றும் பழஞ்சி உள்ளிட்ட இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.