கர்நாடகா: கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் 6 பேர் பலி
கர்நாடகாவில் பெங்களூரு புறநகர் பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் சிக்கி 6 பேர் பலியானார்கள்.
பெங்களூரு,
கர்நாடகாவில் பெங்களூரு புறநகர் பகுதியில் தலகெரே என்ற இடத்திற்கு அருகே, நெலமங்களா என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 6 பேர் பயணித்தனர். இந்நிலையில், பெரிய கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென அந்த கார் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் சிக்கி, காரில் இருந்த அனைவரும் பலியானார்கள். இதனால், தேசிய நெடுஞ்சாலை 48-ல் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.