கர்நாடகா: பெங்களூருவில் சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் விபத்தில் சிக்கிய கார் மற்றும் லாரியில் இருந்தவர்கள் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பஸ் வந்து மோதியது.

Update: 2024-11-12 09:25 GMT

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் எலஹங்கா பறக்கும் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று சொகுசு காரின் மீது மோதியது. இதன்பின்பு, சிமெண்ட் மூடைகளை ஏற்றி வந்த அந்த லாரியும், காரும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, விரைவாக வந்த வால்வோ பஸ் ஒன்று லாரியின் பின்னால் மோதியது. இந்த சம்பவத்தில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

இதுபற்றி எலஹங்கா போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, கார், லாரி மற்றும் பஸ் ஆகியவை கிரேன் உதவியுடன் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்