ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு
ஜார்க்கண்ட் முதல் மந்தியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்.
ராஞ்சி,
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக வென்றது.
34 இடங்களில் இந்தக் கூட்டணி வென்றது. இதையடுத்து, சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன், இன்று முதல் மந்திரியாக பதவியேற்கிறார். அவருக்கு கவனர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.ஜார்கண்டில் பாஜக் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.