சத்தீஸ்கரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தை உயிரிழப்பு: 30 பேர் காயம்
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பிலாஸ்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரிலிருந்து சரங்கர் நகருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. காலை 11 மணியளவில் லால்கடன் மேம்பாலம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிழந்தது. மேலும் 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.