உலகிற்கான இந்தியாவின் செய்தி வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்; யுனெஸ்கோவுக்கான இந்திய தூதர்

பிரதமர் மோடியின் பணி, வழிகாட்டுதலால் இந்தியாவின் மதிப்பு உலகளவில் உயர்ந்து உள்ளது என்று யுனெஸ்கோவுக்கான இந்திய தூதர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2024-07-23 03:06 GMT

புதுடெல்லி,

உலக பாரம்பரிய கமிட்டியின் 46-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில், யுனெஸ்கோ அமைப்புக்கான இந்திய தூதர் மற்றும் நிரந்தர பிரதிநிதியான விஷால் வி சர்மா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, இந்தியா ஒரு கலாசார சூப்பர்பவர் நிறைந்த நாடாக உள்ளது. உலகத்திற்கான இந்தியாவின் செய்தி என்பது, கலாசாரம் ஆகும். வளர்ச்சியும், பாரம்பரியமும் உலகத்திற்கான இந்தியாவின் செய்தியாக உள்ளது என்றார்.

இந்தியாவின் பாரம்பரியம் என்பது வரலாறு என்றில்லாமல் அறிவியலுடன் கூட இணைந்துள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்ட விசயங்களை பற்றி விஷால் கூறும்போது, இதற்கு எடுத்துக்காட்டாக 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ருத்ரேஷ்வரா ராமப்பா கோவில் உள்ளது.

இந்த கோவில், அதிர்ச்சியை தாங்க கூடிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு உள்ளது. அதில் உள்ள சிலைகள், டோலரைட் வகை கடின பாறைகளை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த தொழில்நுட்பம் இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் காண முடியாது. இந்தியாவின் பழமையான தொழில்நுட்பத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இது தவிர்த்து பல்வேறு எடுத்துக்காட்டுகளும் நாட்டில் உள்ளன என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, நம்முடைய முன்னோர்கள் இந்த நினைவு சின்னங்களை கட்டியுள்ளனர். நாம் அவற்றின் பாதுகாவலர்களாக உள்ளோம். நம்முடைய வருங்காலத்திற்காக அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.

இவை கோஹினூர் வைரம் போன்றவை. இவற்றை பாதுகாக்கும்படி நம்முடைய வருங்கால தலைமுறையினரையும் நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் பணி மற்றும் அவருடைய வழிகாட்டுதலால் மத்திய அரசு முன்னோக்கி எடுத்து சென்ற விசயங்கள் ஆகியவற்றால், இந்தியாவின் மதிப்பு உலகளவில் உயர்ந்து உள்ளது என்று அரசுக்கு புகழாரமும் சூட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்