இந்தியாவின் வணிக பொருட்கள் ஏற்றுமதி 2.56 சதவீதம் உயர்வு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வணிக பொருட்கள் ஏற்றுமதி 2.56 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஜூன் மாதம், நாட்டின் வணிக பொருட்கள் ஏற்றுமதி 3 ஆயிரத்து 520 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டின் இதே ஜூன் மாதத்தில் வணிக பொருட்கள் ஏற்றுமதி 3 ஆயிரத்து 432 கோடி டாலராக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி 2.56 சதவீதம் அதிகரித்துள்ளது. என்ஜினீயரிங் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்து பொருட்கள், காபி, இயற்கை, செயற்கை ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததே இதற்கு காரணம் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.