கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 137 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 198 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 695 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 139 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
502 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 182 புள்ளிகளிலும், 300 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 198 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
59 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 31 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 758 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 417 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.