கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 332 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 336 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 746 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 834 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
1 ஆயிரத்து 64 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 684 புள்ளிகளிலும், 358 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 498 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
116 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 91 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 810 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 175 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.