சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை நேற்று பார்த்தோம்: ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய மோடி

பள்ளி குழந்தை போல நேற்று ஒருவர் அழுததை பார்த்தோம் என ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி பேசினார்.;

Update: 2024-07-02 12:16 GMT

புதுடெல்லி,

 ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாததிற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

*இனிவரும் சட்ட சபை தேர்தலில் பாஜகவே வெல்லும்

*இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பதே மக்களின் தீர்ப்பு

*தொடர்ச்சியாக 3-வது முறையாக காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட வெல்லவில்லை.

*தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளது

*தமிழ்நாட்டில் போட்டியிட்ட பல இடங்களில் 2-வது இடங்களை பெற்றுள்ளோம்

*மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக கேரளாவில் பாஜக எம்.பி. வெற்றி பெற்றுள்ளார்;

*அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்"

*3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளோம், 3 மடங்கு வலிமையுடன் செயல்படுவோம்;

*அற்ப அரசியலால் நாடு இயங்கவில்லை, மக்களின் ஆசியால் நாடு இயங்குகிறது.

*காங்கிரஸ் ஆட்சியின் போது பல முறைகேடுகள் நடைபெற்றன.

*சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை நாங்கள் நேற்று மக்களவையில் பார்த்தோம். பள்ளி குழந்தை போல ஒருவர் அழுததை நேற்று லோக்சபாவில் பார்த்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்