நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

நீட் தேர்வு தொடர்பான மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் 8-ந் தேதி விசாரணைக்கு வருகின்றன.

Update: 2024-07-02 19:33 GMT

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ந் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள், கடந்த மாதம் 4-ந் தேதி வெளியிடப்பட்டன. வினாத்தாள் கசிவு, 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால், மறுதேர்வுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

அதன்பேரில், மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர்பான மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் 8-ந் தேதி விசாரணைக்கு வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 8-ந் தேதிக்கான வழக்கு பட்டியலில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 26 நீட் தேர்வு மனுக்கள் விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்