சமூக வலைதளம் மூலம் பழக்கம்... சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு

வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update: 2024-07-02 00:21 GMT

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறாள். சிறுமி கடந்த 2021-ம் ஆண்டு முதல் சமூகவலைதளத்தில் 24 வயது வாலிபருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு இடையில், அந்த வாலிபர் சிறுமியை மிரட்டி ஆபாச படங்களை எடுத்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி சிறுமி பத்லாப்பூர் போலீஸ் நிலையத்தில் வாலிபருக்கு எதிராக புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, அவரை வலைவீசி தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்