குஜராத்: ரூ.4.54 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மதுபானம் புல்டோசரால் அழிப்பு
குஜராத்தில், சோட்டாஉதேப்பூர் பகுதியில், ரூ.4.54 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மதுபானம் அடங்கிய பாட்டில்கள் புல்டோசர் கொண்டு, ஏற்றி அழிக்கப்பட்டன.;
வதோதரா,
குஜராத்தில் மதுபானம் உற்பத்தி, பதுக்கி வைத்தல், விற்பனை மற்றும் அதனை குடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன. 1960-ம் ஆண்டு குஜராத் உருவானதில் இருந்து இந்த சட்ட வடிவம் நடைமுறையில் உள்ளது.
இதனை மீறினால், தூக்கு தண்டனை விதிக்கும் அளவுக்கு கடுமையான சட்டம் உள்ளது. இந்நிலையில், சட்டவிரோத வெளிநாட்டு மதுபானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன்பின்னர், சோட்டாஉதேப்பூர் பகுதியில் கராலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில், ரூ.4.54 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மதுபானம் அடங்கிய பாட்டில்கள் மூத்த மாவட்ட அதிகாரிகளின் முன்னிலையில் வயல்வெளியில் கிடத்தப்பட்டு புல்டோசர் கொண்டு, ஏற்றி அழிக்கப்பட்டன.