கர்நாடகா: பைக் மீது டிராக்டர் மோதியதில் 3 பேர் பலி

கர்நாடகாவில் பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-01-07 11:41 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள ஓபலாபூர் கேட் அருகே சென்று கொண்டிருந்த பைக் மீது டிராக்டர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை நடத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் பற்றி தகலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் மதுகிரி தாலுகாவில் உள்ள கோண்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த முகமது ஆசிப்(12), மும்தாஜ்(38) மற்றும் ஜாகிர் உசேன் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்