உ.பி.: நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 4 பேர் பலி
நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள எட்டாவா-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் டெல்லியில் இருந்து ஹமிர்பிர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த 4ம் தேதி, லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் பஸ் பள்ளத்தில் விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.