வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று மாலத்தீவு பயணம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று மாலத்தீவு செல்கிறார்.

Update: 2024-08-09 04:13 GMT

 புதுடெல்லி,

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான மாலத்தீவு சமீப காலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. புவிசார் அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நாடாக மாலத்தீவு உள்ளது. மாலத்தீவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பங்கேற்றார். இந்த நிலையில், தற்போது, மாலத்தீவில் புதிய மந்திரி குழு பதவியேற்பு விழா நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக 3 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாலத்தீவு செல்கிறார். ஜெய்சங்கரின் இந்த பயணத்தின்போது இருதரப்பு நலன்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையும் உயர் மட்ட அளவில் நடைபெறலாம் என்று தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்