அசாமில் ரூ. 5.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

அசாமில் ரூ. 5.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-03-20 19:33 IST
அசாமில் ரூ. 5.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

கோப்புப்படம்

திஸ்பூர்

அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்ட போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சென்றுகொண்டிருப்பதை கண்டனர். அவரிம் நடத்திய சோதனையில் அவர் போதைப்பொருள் வியாபாரி என தெரிய வந்துள்ளது.

அவரிடம் இருந்து மொத்தம் 17,000 யாபா மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் போதைப்பொருள் வியாபாரியை கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ. 5.1 கோடி என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதற்கு தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்