ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 6 தொழிலாளர்கள், ஒரு டாக்டர் பலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 தொழிலாளர்கள் மற்றும் ஒரு டாக்டர் பலியாகினர்.;

Update: 2024-10-21 00:51 GMT

கோப்புப்படம் 

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ககாங்கிர் என்ற இடத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த இடத்தில் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு டாக்டர் மற்றும் 5 கட்டுமான மொழிலாளர்கள் பலியாகினர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்