இந்துத்துவா மீது தீவிர பக்தி... மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரெஞ்சு பெண்
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழச்சியில் பங்கேற்க வந்துள்ள பிரெஞ்சு பெண் பாஸ்கல், ஆன்மாவை சுத்திகரிப்பதற்கான புனித தலம் இது என கூறியுள்ளார்.;
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேசத்தில் வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழச்சி நடைபெற உள்ளது. இந்த வருடம் கும்பமேளாவுக்கு 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்த கும்பமேளாவானது, இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் என்றும் கூறினார்.
இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஸ்கல் என்ற பெண்மணி உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கும்பமேளாவின் பின்னணி பற்றி எனக்கு நன்றாக தெரியும். பிரயாக்ராஜில் இருப்பதற்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மாவை சுத்திகரிப்பதற்கான புனித தலம் இது என்றார்.
இந்துத்துவா மற்றும் கடவுள் சிவனின் மீது பிரியம் கொண்டவள் நான். இதற்கு முன்பு பல யோகிகள், சாதுக்கள் மற்றும் இந்து மக்களை சந்தித்திருக்கிறேன். அவர்களை சந்திப்பதற்காக மீண்டும் வந்துள்ளேன். இந்த நிலையில், மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என பிரயாக்ராஜ் ஐ.ஜி. தருண் காபா கூறியுள்ளார்.