அயோத்தியில் தீபத் திருவிழா: 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டம்

அயோத்தியில் இந்த ஆண்டு தீபத் திருவிழாவில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2024-10-20 06:03 GMT

லக்னோ,

உத்தர பிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், 'தீபோத்ஸவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

தொடர்ந்து 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன. கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்கு அயோத்தியில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சரயு நதிக்கரையில் உள்ள 55 படித்துறைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத் திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க உள்ளதாகவும், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்