வகுப்புவாதம் மூலம் நாட்டிற்கு தீங்கிழைக்கின்றனர்: சரத்பவார் தாக்கு

மராட்டிய மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர் என்று சரத்பவார் கூறினார்.

Update: 2024-11-15 22:48 GMT

மும்பை,

மும்பையில் தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி தலைவர் சரத்பவார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வகுப்புவாத நடவடிக்கைக்கு பெயர் பெற்றவர். அவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?. அவரை பற்றி ஒரு வார்த்தை கூட நான் சொல்ல விரும்பவில்லை. அதுபோன்றவர்கள் தான் காவி உடை அணிந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். வகுப்புவாதம் மூலம் நாட்டிற்கு தீங்கிழைக்கின்றனர்.

பிரதமர் மோடி எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் நியாயமற்றது. அவர் தான் சமூகத்தை பிளவுபடுத்துகிறார். அவரின் பேச்சு கண்டனத்துக்குரியது. கடந்த சில நாட்களாக அவர் ஆற்றிய உரைகளையும், அரசியல் ரீதியாக எழுப்பும் பிரச்சினைகளை பார்த்தாலே இது புலப்பட்டுவிட்டும்.

நான் பிரசார பயணம் மேற்கொண்டபோது மக்களின் மத்தியில் ஒரு பெரிய கொந்தளிப்பை பார்க்க முடிந்தது. மராட்டிய மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், எங்களை போன்றவர்களுக்கும், எங்கள் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்