படகு விபத்தில் 14 பேர் பலி: எலிபெண்டா தீவு வெறிச்சோடியது

எலிபெண்டா தீவுகளில் உள்ள குடைவரை கோவில் உலக புகழ் பெற்றதாகும்.

Update: 2024-12-20 02:12 GMT

மும்பை,

மும்பையில் உள்ள எலிபெண்டா தீவு புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மும்பை வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக செல்லும் இடங்களில் ஒன்றாக எலிபெண்டா தீவு உள்ளது. வௌிநாட்டினர் மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி மும்பை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் விடுமுறை நாட்களில் எலிபெண்டா தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

எலிபெண்டா தீவுகளில் உள்ள குடைவரை கோவில் உலக புகழ் பெற்றதாகும். எலிபெண்டா தீவுக்கு சுற்றுலா பயணிகள் மும்பை கேட்வே ஆப் இந்தியா, பாவுச்சா தக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படகு மூலம் சென்று வருகின்றனர். குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் எலிபெண்டா தீவுக்கு செல்கின்றனர். நேற்று முன்தினம் மாலை எலிபெண்டா தீவுக்கு சென்ற படகு விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் எதிரொலியாக நேற்று மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து எலிபெண்டா செல்லும் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. எனவே எலிபெண்டா தீவு வழக்கத்தை விட வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்