பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி செய்கிறது: பாஜக குற்றச்சாட்டு

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்புள்ளது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2024-08-12 08:37 GMT

புதுடெல்லி,

செபி தலைவர் மாதபி புரி புச் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஹிண்டன்பர்க் நேற்று முன் தினம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக நடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், டூல்கிட் கும்பலும் இணைந்து இந்தியாவில் பொருளாதார அராஜகம் மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்த சதி செய்துள்ளனர் பங்கு சந்தை சீராக இயங்குவதை உறுதி செய்வது செபியின் சட்டப் பொறுப்பு. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்புள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் ஹிண்டன்பர்க் அறிக்கைகள் வெளிவராதது ஏன்? இந்திய பங்குச்சந்தைகளை சீர்குலைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சதி செய்கின்றன" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்