காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்திருக்கிறார்கள்.. மத்திய பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் தெரிவிக்கப்பட்ட பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-23 09:20 GMT

சென்னை:

மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது:-

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 2024-ஐ நிதி மந்திரி படித்து இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் தெரிவிக்கப்பட்ட பயிற்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஏஞ்சல் வரியை ஒழிக்க பல ஆண்டுகளாக காங்கிரஸ் கெஞ்சியது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏஞ்சல் வரி ஒழிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கை பக்கம் 31-ல் குறிப்பிட்டுள்ளோம். இப்போது ஏஞ்சல் வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில யோசனைகளையும் நிதி மந்திரி காப்பி அடித்திருக்கலாம் என நினைக்கிறேன். அவற்றை பின்னர் பட்டியலிடுகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi

Tags:    

மேலும் செய்திகள்