பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க பா.ஜ.க. எம்.பி. கோரிக்கை

சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான நலன்களுக்காக தன்னுடைய மொத்த வாழ்வையும் அர்ப்பணித்த முன்னணி அரசியல்வாதி என கன்ஷி ராமுக்கு பா.ஜ.க. எம்.பி. புகழாரம் சூடடியுள்ளார்.;

Update: 2024-07-25 13:34 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 23-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரெயில்வே, உட்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்பட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது, ஷாஜகான்பூர் தொகுதியின் பா.ஜ.க. உறுப்பினரான அருண் குமார் சாகர் எழுந்து பேசினார்.

அப்போது அவர், சமூகம் மற்றும் நாட்டுக்கு பங்காற்றிய விசயங்களை கவனத்தில் கொள்ளும்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அரசை நான் வலியுறுத்துகிறேன் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான நலன்களுக்காக தன்னுடைய மொத்த வாழ்வையும் அர்ப்பணித்த முன்னணி அரசியல்வாதி மற்றும் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கன்ஷிராம் இருக்கிறார். அவர் பகுஜன் நாயக் என்றும் புகழாரம் சூடடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்