பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கோஷம்: ஓவைசிக்கு கோர்ட்டு சம்மன்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பிய ஓவைசிக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
லக்னோ,
அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யாகவும் செயல்பட்டு வருபவர் அசாதுதீன் ஓவைசி. இவர் கடந்த ஜனவரி 25ம் தேதி நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழாவின்போது ஓவைசி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவான கோஷங்களை ஏழுப்பினார்.
இதனிடையே, உத்தரபிரதேச மாநிலம் பெய்ரெலி மாவட்ட கோர்ட்டில் ஓவைசிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. விரேந்திர குப்தா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்கும்போது ஓவைசி அரசியல் சாசனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஓவைசிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓவைசிக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக வரும் 7ம் தேதி நேரில் ஆஜராகும்படி ஓவைசிக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.