அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் தேங்கிய மழைநீர் - அதிகாரிகள் சஸ்பெண்ட்

அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் மழைநீர் தேங்கிய சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-29 07:52 GMT

லக்னோ,

உத்தரபிரதேசம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அயோத்தியில் கடந்த சில நாட்களுக்குமுன் கனமழை பெய்தது. அப்போது, ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ராமர் கோவில் செல்லும் பாதையில் உள்ள சாலைகளின் வளைவுகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், ராமர் கோவில் செல்லும் வழி, சாலையில் மழைநீர் தேங்கிய சம்பவம் தொடர்பாக 6 அதிகாரிகளை உத்தரபிரதேச அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்