தற்போது எந்த ஒரு இந்தியரும் காஷ்மீருக்கு பயம் இன்றி செல்லலாம் - அஜித்பவார்

இன்று நமது இந்திய கொடி காஷ்மீரில் மிகவும் பெருமையுடன் பறப்பதாக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்தார்.

Update: 2024-09-11 23:25 GMT

புனே,

காங்கிரஸ் தலைவர் சுசில்குமார் ஷிண்டே தான் மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது, ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கிற்கு செல்ல பயந்தேன் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார், "புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, தற்போதைய அரசு வெறும் பார்வையாளராக இருக்காமல், எதிரிகளுக்கு எதிரான தாக்குதலை முடுக்கி விட்டது. இதை நாட்டு மக்கள் பாராட்டினர். தற்போது அங்கு தேர்தல் நடைபெற உள்ளதால், அனைவரும் அச்சமின்றி செல்கின்றனர்.

லால் சவுக்கில் இந்திய மூவர்ண கொடியை ஏற்றுவது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று நமது இந்திய கொடி மிகவும் பெருமையுடன் அங்கு பறக்கிறது. நாங்கள் தற்போது விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் போன்ற பண்டிகைகளை காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொண்டாடி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்