அங்கித் திவாரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி அங்கித் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.;

Update: 2024-10-23 00:07 GMT

புதுடெல்லி,

திண்டுக்கல் அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த மார்ச் 20-ந் தேதி உத்தரவிட்டது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியில்லாமல் அங்கித் திவாரி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. இதற்கிடையே தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி நேற்று முறையிடப்பட்டது.

இதையேற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அங்கித் திவாரியின் மனுவை இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவித்தது. அதன்படி, மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்