ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கிய அம்பானி

பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.;

Update: 2024-07-12 14:07 GMT

மும்பை,

ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயத்துடன் ஹல்திராம்சின் ஆலு பூஜியா, சேவ் உள்ளிட்ட பொருட்கள் நிறைந்த பரிசு தொகுப்பை அம்பானி வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை மும்பையில் இன்று கோலாகலமாக திருமணம் செய்கிறார்.

திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, ஆடம்பர பரிசுகளுடன் நடத்தப்படுகையில், ரிலையன்ஸ் ஊழியர்களும் விழாவைக் கொண்டாட ஒரு பரிசுப் பெட்டி தொகுப்பை பெற்றுள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக ஊழியர்கள் பெற்ற இந்த பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

சிவப்பு பரிசுப் பெட்டியில் தங்க நிறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில்,"எங்கள் தேவி மற்றும் தேவதைகளின் தெய்வீக அருளால், நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம். நல்வாழ்த்துக்களுடன், நீடா மற்றும் முகேஷ் அம்பானி" என குறிப்பிடப்பட்டிருந்தது. பரிசுபொருட்களில் வெள்ளி நாணயத்துடன் இனிப்பு காரவகைகள் இடம் பெற்று உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்