பெங்களூரில் கனமழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூரில் இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்று காலை கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

Update: 2024-10-20 15:28 GMT

பெங்களூருவில் நேற்று முன்தினம் பகலில் திடீரென கனமழை கொட்டியது. தாழ்வான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பிரதான சாலைகளில் வாகன நெரிசல் உண்டானது. பகல் மட்டுமின்றி இரவிலும் மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நாளை (திங்கட்கிழமை) பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் இன்று வானம் மேகமூட்டாக காணப்படும் என்றும் சில நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த மாதம் (செப்டம்பர்) வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக இருந்த நிலையில் இந்த மாதம் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் நாட்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளதால், வறண்டு போய் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் புத்துயிர் பெற்று நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்