டெல்லியில் 40 சதவீதம் மக்கள் சுவாசக்கோளாறால் பாதிப்பு

டெல்லியில் 40 சதவீத குடும்பத்தினர் மாசு பிரச்சினைகளால் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தது கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2024-11-11 22:53 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கு பிறகு காற்று மாசு பாதிப்பு மக்களிடத்தில் எப்படி உள்ளது, அவர்கள் மாசு தொடர்பான பிரச்சினைகளுக்காக ஆஸ்பத்திரிகளுக்கு சென்றார்களா? என்பது பற்றி உள்ளூர் வட்டாரக்குழு ஒரு ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதன்படி கடந்த 3 வாரங்களில் 40 சதவீத குடும்பத்தினர் மாசு பிரச்சினைகளால் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது 10-ல் 4 குடும்பத்தினர் சுவாசக்கோளாறு, இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சினைகளுக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளனர். இந்த விகிதாசாரம் கடந்த மாதம் 30 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்