டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-06-02 19:27 GMT

கோப்புப்படம் 

ராஜ்கர்,

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பிப்லோதிஜாத் என்ற இடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர்களில் 13 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவர் தலை மற்றும் மார்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக மேல் சிகிச்சைக்காக போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்