2014-2024: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் பத்து ஆண்டுகால சாதனை
'மேக் இன் இந்தியா' திட்டம் நாட்டை உலகின் முன்னணி உற்பத்தி நாடாக உருவெடுக்கச் செய்துள்ளது.;
புதுடெல்லி,
2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ' மேக் இன் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது 2024-ம் ஆண்டில், இந்த திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் திட்டமாக உருவெடுத்துள்ளது.
பெரும் சாதனைகள்:
அந்நிய நேரடி முதலீடு: 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, இந்தியா 667.41 பில்லியன் அளவில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது கடந்த 24 ஆண்டுகளில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகளை ஒப்பிடுகையில் 67 சதவீதமாகும்.
உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம்:
மொபைல் போன்கள், மருந்து உற்பத்தி, வாகனங்கள் உற்பத்தித் துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் ரூ.12.50 லட்சம் கோடி உற்பத்தி மற்றும் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மின்னணுவியல் துறை:
இந்தியாவின் மொபைல் சாதனை உற்பத்தி 2014-15-ம் ஆண்டில் 5.8 கோடி அலகுகளிலிருந்து 2023-24-ம் நிதியாண்டில் 33 கோடி அலகுகளாக உயர்ந்துள்ளது. 5 கோடி அலகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தி மற்றும் பாதுகாப்பு:
இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பாதுகாப்பு துறையில் 1.27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன் பாதுகாப்பு சாதனங்களின் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது.
தொலை தொடர்பு மற்றும் கட்டுமானத்துறை:
4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பம் அடிப்படையிலான தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தியில் இந்தியா முன்னேறி வருகிறது. பிரதமரின் விரைவுசக்தித் திட்டத்தின் மூலம் 1.45 டிரில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்:
ஒருங்கிணைந்த கட்டண நடைமுறை செயலி மூலம் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16.58 பில்லியன் அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது.
துறை சார்ந்த வெற்றிகள்:
இந்தியாவில் ரெயில்போக்குவரத்து, தொலைத்தொடர்பு, பாதுகாப்புத் துறைகளில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் 'மேக் இன் இந்தியா' திட்டம் நாட்டை உலகின் முன்னணி உற்பத்தி நாடாக உருவெடுக்கச் செய்துள்ளது.