தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி
மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கடந்த 2ம் தேதி காலை மும்பை-கொங்கன் வழித்தடத்தில் திவா மற்றும் நிலாஜே ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும்போது மாண்டோவி விரைவு ரெயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக ரெயில்வே போலீஸ் அதிகாரி இன்று தெரிவித்தார்.
பலியானவர்களின் உடல்கள், திவாவில் உள்ள தாடிவாலி அகாசன் பகுதியில் வசிக்கும் இருவரது உடல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களின் இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.