127 வயதில் யோகா செய்து அசத்திய தாத்தா...வீடியோ வைரல்

சர்வதேச யோகா தினத்தையொட்டி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் 127 வயதான யோகா குரு, யோகா செய்து அசத்தினார்.;

Update:2024-06-16 13:21 IST

மும்பை,

வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகளவில், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜூன் 19ம் தேதி யோகா நாளில் பல பொது இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் செய்யவும், விழிப்புணர்வு மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த, 127 வயதான யோகா குரு பத்ம ஸ்ரீ சுவாமி சிவானந்தா தாத்தா யோகா செய்து அசத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 127 வயதான யோகா குரு, கழுத்தை அமைத்து யோகா செய்யும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. வயதானாலும் சிறப்பாக யோகா செய்து காட்டி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

பத்மஸ்ரீ சுவாமி சிவானந்தா 127 வயதிலும். தினந்தோறும் யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் தனக்கான வேலைகளை தாமே செய்து கொள்கிறார். எண்ணெய் தவிர்த்த உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார். இது போன்று கட்டுக்கோப்புடன் வாழ்வதே அவரின் ஆயுள் நீட்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்