மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு 11 மந்திரி பதவிகள்
மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். நிர்மலா சீதாராமன், சுரேஷ்கோபி உள்பட 71 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.;
புதுடெல்லி,
"நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வாரியான மந்திரி பதவிகள் விவரம் வருமாறு:-
பா.ஜனதா - 61
தெலுங்குதேசம் - 2 (கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு,
சந்திர சேகர் பெம்மசானி)
ஐக்கிய ஜனதா தளம் - 2 (ராம்நாத் தாக்குர், பி.எல்.வெர்மா)
சிவசேனா (ஷிண்டே) - 1 (பிரதாப்ராவ் ஜாதவ்)
ஜனதா தளம் (எஸ்) - 1 (எச்.டி.குமாரசாமி)
இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 1 (ஜித்தன் ராம் மஞ்சி)
இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே) - 1 (ராம்தாஸ் அத்வாலே)
லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) - 1 (சிராக் பஸ்வான்)
ராஷ்டிரீய லோக் தளம் - 1 ஜெயந்த் சவுதாரி)
அப்னா தளம் - 1 (சந்திரசேகர் சவுதாரி)
மாநில வாரியாக மந்திரிகள் எண்ணிக்கை
உத்தரபிரதேசம் - 10
பீகார் - 8
மராட்டியம் - 6
குஜராத் - 5
கர்நாடகா - 5
மத்திய பிரதேசம் - 5
ராஜஸ்தான் - 4
ஜார்கண்ட் - 4
ஆந்திரா - 3
அரியானா - 3
ஒடிசா - 3
மேற்கு வங்காளம் - 2
கேரளா - 2
தெலுங்கானா - 2
அசாம் - 2
கோவா - 1
தமிழ்நாடு - 1
ஜம்மு காஷ்மீர் - 1
இமாசலபிரதேசம் - 1
அருணாசலபிரதேசம் - 1
பஞ்சாப் - 1
உத்தரகாண்ட் - 1
டெல்லி - 1