காதலனுடன் ஓட்டம்.. பெற்றோரின் செயலால் சிறுமி எடுத்த விபரீத முடிவு
காதல் ஜோடியை தேடி வந்த போலீசார், 4 நாட்களுக்கு பிறகு அவர்களை கண்டுபிடித்தனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் இரண்டு ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
ஆனால், இவர்களது திருமணத்துக்கு சிறுமியின் வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன், சிறுமியின் தந்தை இதுகுறித்து இளைஞரை எச்சரித்ததுடன், இளைஞரின் பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த காதல் ஜோடியினர், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதையறிந்த சிறுமியின் தந்தை, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காதல் ஜோடியை தேடி வந்த போலீசார், 4 நாட்களுக்கு பிறகு அவர்களை கண்டுபிடித்தனர். பின்னர் சிறுமியை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், இளைஞரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் கடும் சோகத்தில் இருந்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதலனிடம் இருந்த பெற்றோர் பிரித்ததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.