வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் 'விருந்தோம்பல் மேலாண்மை' படிப்புகள்

ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்" என்பது விரிவான பணிவாய்ப்புகள்கொண்ட துறையாகும்

Update: 2024-10-21 08:51 GMT

Representative image (ANI)

முகமலர்ச்சியோடு விருந்தினர்களைப் போற்றி வரவேற்று அவர்களுக்கு விருந்துகொடுத்தும், இனிமேல் விருந்தினர்கள் எப்போது வீட்டிற்கு வருவார்கள்? என எதிர்பார்த்தும் காத்திருப்பவர்கள் வான்புகழ்கொண்ட பெரியோர்களின் பட்டியலில் இடம்பெறுவார்கள்" - என்பது வள்ளுவர் வாக்கு.

இதனைத்தான் -

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு"

- என திருக்குறள் தெளிவாக்குகிறது.

விருந்தோம்பல் பண்பு மனிதர்களுக்குரிய பண்புகளில் மிகவும் முக்கியமான பண்பாகும். இந்தப் பண்பை வளர்த்துக்கொண்டவர்கள் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.

"விருந்தோம்பல் மேலாண்மை" என்று அழைக்கப்படும் "ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்"(hospitality Management) தொடர்புடைய படிப்புகள் இப்போது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

சிலர் "ஹோட்டல் மேனேஜ்மெண்ட்"(Hotel Management)என்பதுதான் "ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்"(hospitality Management) என்று நினைக்கிறார்கள். ஆனால், "ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்" என்பது விரிவான பணிவாய்ப்புகள்கொண்ட துறையாகும்.ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்பது உணவு வசதியோடுகூடிய தங்கும் விடுதியை மேலாண்மை செய்வதைக் குறிக்கும். ஆனால், ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்"(hospitality Management) என்பது

1.உணவு மற்றும் அருந்துவதற்கான பானம் (Food and Beverage),

2.தங்கும் விடுதி (Lodging),

3.கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் (Meetings and Events),

4.பொழுதுபோக்குகள் (Recreations),

5.பயணங்கள் மற்றும் சுற்றுலா (Travel and Tourism)

–ஆகிய 5 முக்கிய பிhpவுகளை உள்ளடக்கியதாகும்.

பணி வாய்ப்புகள்

ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்"(hospitality Management)படிப்பை முறையாகக் கற்றவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக -

v ஹோட்டல் மேனேஜர் (Hotel Manager)

v ரெஸ்ட்டாரன்ட் மேனேஜர்(Restaurant)

v பிரன்ட் ஆபீஸ் மேனேஜர் (Front Office Manager)

v ஹவுஸ்கீப்பிங் மேனேஜர் (ர்ousekeeping Manager)

v கேட்டரிங் அசிஸ்டென்ட் (Catering Assistant)

v டிராவல் ஏஜென்ட் (Travel Agent)

v சுற்றுலா வழிகாட்டி (Tour Guide)

v நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் (Event Planner)

v மார்க்கெட்டிங் மேனேஜர் (Marketing Manager)

v பப்ளிக் ரிலேசன் மேனேஜர் (Public Relation Manager),

v கான்பெரன்ஸ் ஆர்கனைசர் (Conference Organiser)

v தீம் பார்க் ஆர்கனைசர் (Theme Park Organiser)

- போன்ற பலவித பணிகள் எளிதில் கிடைக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.

ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் படிப்புகள்

ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் தொடர்புடைய சில படிப்புகள் பின்வருமாறு -

v விருந்தோம்பல் மேலாண்மையில் டிப்ளமோ( hospitality Management)

v பி.ஏ விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மேலாண்மை

v பி.ஏ விருந்தோம்பல் மேலாண்மை

v கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் சமையல் கலைகளில் இளங்கலை (BCT & CA)

v B.Sc ஹாஸ்பிடலிட்டி நிர்வாகம்

v B.Sc  ஹாஸ்பிடலிட்டி மற்றும் ரோட்டல் நிர்வாகம்

v B.Sc விருந்தோம்பல் மற்றும் ரோட்டல் மேலாண்மை

v B.Sc விருந்தோம்பல் மேலாண்மை (ரான்ஸ்)

v B.Sc விருந்தோம்பல் படிப்புகள்

v ஹாஸ்பிடலிட்டி மற்றும் கேட்டரிங் மேலாண்மையில் பி.எஸ்சி

v விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாப் படிப்பில் பி.எஸ்சி

v ஏவியேஷன் டூரிஸம் மற்றும் ஹாஸ்பிடலிட்டி மேலாண்மையில் இளங்கலை

v M.Sc ஏர்லைன்ஸ் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடலிட்டி மேலாண்மை

v எம்பிஏ விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா

v எம்பிஏ விருந்தோம்பல் மேலாண்மை

v எம்பிஏ சுற்றுலா மற்றும் ஹாஸ்பிட்டலிட்டி மேலாண்மை

ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்தவர்களுக்கு Marketing, Public Relation, Human Resources, Customer Services, Tourism, Financial Management, Accounting ஆகியதுறைகளில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளதால், மிக அதிக சம்பளத்துடன்கூடிய மனநிறைவான பதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.குறிப்பாக - பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பும், மாறுபட்ட சூழல்களில் பணி செய்யும் பொறுப்பும், வெவ்வேறு பண்பாட்டுச்சூழலில் இயங்கும் மனிதர்களோடு நெருங்கிய தொடர்புகொள்ளும் வாய்ப்பும், ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்தவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

சில முக்கிய திறமைகள்

"ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்" படிப்பில் பட்டம் பெற்றவர்கள் சில முக்கிய திறமைகளை (Skills) படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள இயலும். குறிப்பாக - பகுத்தாய்வு செய்யும் திறன் (Analytical Skill), பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணும் திறன் (Problem Solving Skill), இணைந்து பழகும் திறன் (Team Work), தலைமைப்பண்பு (Leadership), ஒருங்கிணைக்கும் திறன் ஆகிய திறமைகளை வளர்த்து சிறப்பான முறையில் செயல்பட இயலும். எனவே - ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் என்பது ஒரு ஹோட்டல் மேனேஜர் பணிக்கான பயிற்சி அல்ல. மாறிவருகின்ற சூழலுக்குஏற்ப திறமைகளை வளர்த்துக்கொண்டு, எல்லா துறைகளிலும் முன்னேறுவதற்கான பயிற்சிகளை வழங்கும் மேலாண்மை படிப்பாகும்.



Tags:    

மேலும் செய்திகள்