தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர விருப்பமா? கிளாட் தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க

புகழ்பெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் சட்டப் படிப்புகளை படிப்பதற்கு கண்டிப்பாக நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வுகள் பட்டப்படிப்பு தேர்வின் முடிவுகள் வெளிவருவதற்குமுன்பே எழுத வேண்டியது அவசியமாகும்.

Update: 2024-10-06 23:32 GMT

காமன் லா அட்மின் டெஸ்ட்" (Common Law Admission Test) எனப்படும் "கிளாட் தேர்வு (CLAT)" இந்திய அளவில் செயல்பட்டுவரும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து சட்டம் படிப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு ஆகும். 2025 -ஆம் ஆண்டு தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் தேர்வதற்காக நடத்தப்படும் இந்தத் தேர்வு பற்றிய அறிவிப்பு இப்போதே வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு அக்டோபர்; 15-ஆம் தேதிக்குள் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டும். காமன் லா அட்மின் டெஸ்ட்" என்னும் தேர்வு டிசம்பர்; மாதம் 1ஆம் தேதி (01.12.2024) அன்று நடைபெற உள்ளது.

தேர்வு விவரம்

"கன்சோர்டியம் ஆப் நேஷனல் லா யூனிவர்சிட்டிஸ்" (Consortium of National Law Universities)என்னும் அமைப்புதான் இந்த கிளாட் (CLAT) என்னும் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. பெங்களூரில் உள்ள இந்த அமைப்பு சட்டப் பட்டப்படிப்பு (Under Graduate Programme) மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான (Post Graduate Programme) நுழைவுத் தேர்வை நடத்துகிறது.

சட்டப் பட்டப்படிப்பு  

5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் பட்டப்படிப்பு (5 Year Integrated Law Degree)

இந்த சட்டப்பட்டபடிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களும், மாற்றுத் திறனாளிகளும் 40 சதவிகித மதிப்பெண்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்றிருந்தால் போதும்.2025ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பிளஸ் 2 தேர்வை எழுதுபவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

பட்ட மேற்படிப்பு (ஓராண்டு எல்.எல்.எம். பட்டம்)

எல்.எல்.எம். (LLM) என்னும் பட்ட மேற்படிப்பில் சேர விரும்புபவர்கள் கண்டிப்பாக எல்.எல்.பி. (LLB) என்ற பட்டப்படிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது சமமான தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சட்டப் பட்டப்படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களும், மாற்றுத்திறனாளிகளும் 45 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் இந்தத் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவார்;கள்.2025 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மேற்கண்ட தகுதியைப் பெற இருப்பவர்;கள் இப்போதே இந்தத் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம்.

கிளாட் - நுழைவுத் தேர்வு விவரம்

கிளாட் நுழைவுத் தேர்வு கீழ்க்கண்ட 5 பிரிவுகளில் நடத்தப்படும். அவை -

1.தற்கால நிகழ்வுகள் மற்றும் பொதுஅறிவு

2.சட்டப் பகுத்தறிவுத்திறன்

3.ஆங்கில மொழி

4.பகுத்தாய்வு திறன்

5.கணிதவியல் நுட்பங்கள்


தற்கால நிகழ்வுகள் மற்றும் பொதுஅறிவு என்னும் பிரிவில் அரசியல், வரலாறு, புவியியல், நடப்பு நிகழ்வுகள், புள்ளியியல் பொது அறிவு, சர்வதேச நிகழ்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்படம், பொருளாதாரம், முக்கிய நிகழ்வுகள், சுற்றுச்சூழல், மற்றும் சூழலியல் உள்ளிட்ட பாடங்கள் உள்ளன. இந்தப் பாடங்களில் சுமார்; 28முதல் 32 கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. கேள்விகள் கொள்குறிவகை வினா அமைப்பில் (Objective Type)இடம்பெறும். மொத்தமுள்ள கேள்விகளில் 25 சதவிகித கேள்விகள் இந்தப்பகுதிகளில் இருந்து இடம்பெறும்.

சட்டப் பகுத்தறிவுத்திறன் என்னும் பிரிவில் இந்திய அரசியல் அமைப்பு, கிரிமினல் சட்டம், முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள், நடப்பு சட்டம் உள்ளிட்ட பாடங்கள் உள்ளன. இந்தப் பாடங்களில் சுமார் 28 முதல் 32 கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. கேள்விகள் கொள்குறிவகை வினா அமைப்பில் இடம்பெறும். மொத்தமுள்ள கேள்விகளில் 25 சதவிகித கேள்விகள் இந்தப்பகுதிகளில் இருந்து இடம்பெறும்.

ஆங்கில மொழி என்னும் பிரிவில் ஆங்கில இலக்கணங்கள், பிழைகளை கண்டறிதல் உள்ளிட்ட பாடங்கள் உள்ளன. இந்தப் பாடங்களில் சுமார்; 22 முதல் 26 கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. கேள்விகள் கொள்குறிவகை வினா அமைப்பில்இடம்பெறும். மொத்தமுள்ள கேள்விகளில் 20 சதவிகித கேள்விகள் இந்தப்பகுதிகளில் இருந்து இடம்பெறும்.

பகுத்தாய்வு திறன் (Logical Reasoning) என்னும் பிரிவில் ரீசனிங் தொடர்பான கேள்விகள் இடம் பெறும்.

இந்தப் பாடங்களில் சுமார்; 10 முதல் 14 கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. கேள்விகள் கொள்குறிவகை வினா அமைப்பில் இடம்பெறும். மொத்தமுள்ள கேள்விகளில் 10 சதவிகித கேள்விகள் இந்தப்பகுதிகளில் இருந்து இடம்பெறும்.

கணிதவியல் நுட்பங்கள் (Quantitative Tecர்niques) என்னும் பிரிவில், - எண்ணியல் கணக்குகள், மீபொவ, மீசிம, விகிதம், சுருக்குதல், சதவிகிதம், சராசரி கண்டுபிடித்தல், வயது கணக்குகள், காலம் மற்றும் நேர கணக்குகள், முக்கோணவியல், அளவீடுகள் உள்ளிட்ட பாடங்கள் உள்ளன. இந்தப் பாடங்களில் சுமார்; 10 முதல் 14 கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. கேள்விகள் கொள்குறிவகை வினா இடம்பெறும். மொத்தமுள்ள கேள்விகளில் 10 சதவிகித கேள்விகள் இந்தப்பகுதிகளில் இருந்து இடம்பெறும். இந்த நுழைவுத்தேர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு www.consortiumofnlus.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.



Tags:    

மேலும் செய்திகள்