ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது;

மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 88 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 22 ஆயிரத்து 922 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 147 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 449 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
465 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 49 ஆயிரத்து 779 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 170 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 24 ஆயிரத்து 140 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
209 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 352 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 331 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 141 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
கடந்த ஒரு மாதத்திற்குமேல் தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை கடந்த 3 நாட்களாக ஏற்றம் பெற தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.