சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்றும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 84 புள்ளிகள் சரிவுடன் நிப்டி 24 ஆயிரத்து 664 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அதேபோல், 21 புள்ளிகள் சரிவுடன் பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 261 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
மேலும், 257 புள்ளிகள் சரிவுடன் சென்செக்ஸ் 80 ஆயிரத்து 760 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 75 புள்ளிகள் சரிவுடன் மிட் கேப் நிப்டி 12 ஆயிரத்து 920 புள்ளிகளிலும், 85 புள்ளிகள் சரிவுடன் பின் நிப்டி 23 ஆயிரத்து 500 என்ற புள்ளிகளிலும் பின் நிப்டி வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. பேங்க் எக்ஸ் 20 புள்ளிகள் சரிவுடன் 58 ஆயிரத்து 240 புள்ளிகளிலும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.