ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

Update: 2024-10-14 05:32 GMT

மும்பை,

மத்திய கிழக்கில் போர் பதற்றம், ரேப்போ வட்டி விகிதம் உள்பட பல்வேறு காரணிகளால் கடந்த வாரம் சரிவுடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி, நிப்டி 128 புள்ளிகள் ஏற்றம் பெற்று 25 ஆயிரத்து 90 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 516 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 689 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 440 புள்ளிகள்வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ் 81 ஆயிரத்து 822 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 215 புள்ளிகள்வரை உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 828 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 10 புள்ளிகள்வரை சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 968 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 540 புள்ளிகள்வரை ஏற்றம் கண்ட பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 806 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்