ஆகஸ்டு மாத ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஆகஸ்டு மாத பலன்களை பார்ப்போம்.

Update: 2024-07-31 11:11 GMT

சிம்ம ராசி அன்பர்களே..

நீங்கள் உள்ளதை உள்ளபடி பேசுவதால் பிறர் பொல்லாப்புக்கு உள்ளாவீர்கள். உங்களை புரிந்தவர்கள் மட்டும்தான் உங்களை உணர்வார்கள். எது வந்தாலும் ஒரு கை பார்ப்பவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் அமைதி நிலவும். நேரடி அதிகாரி உங்களுக்கு உதவாவிட்டாலும் அதற்கு மேலுள்ள அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களுக்குத்தான் நஷ்டம்.

குடும்பத் தலைவிகளுக்கு, குடும்ப நிர்வாகத்தை பொறுத்தவரை உங்கள் சிறப்பான நடவடிக்கைகள் நற்பெயரைப் பெற்றுத் தரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்வீர்கள்.

கலைஞர்களுக்கு நினைத்தப்படியே பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். பல படங்கள் ஒப்பந்தம் ஆகும். ஒப்பந்தம் செய்த படங்களை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து முடித்து விடுவீர்கள்.

மாணவர்கள் நன்கு படிப்பர். கல்வி நிறுவனங்கள் மூலமாக சுற்றுலா சென்று வரும் வாய்ப்பும் கிட்டும். சுற்றுலா செல்லும் போது தங்கள் உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: 10, 14,

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, ,புதன்

தவிர்க்க வேண்டிய கிழமைகள்: திங்கள், சனி

அதிர்ஷ்டக்கல் : மாணிக்கம்

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: நீலம், வெள்ளை

பரிகாரம்

குரு பகவானுக்கு வியாழன் தோறும் சென்று அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்கள், அனைவரிடமும் கல கலவென்று பேசுபவர்கள். யாரையும் தன்வசப்படுத்தும் பேச்சாற்றல் மிக்கவர். ஆளுக்கேற்றார்போல் பேசுபவர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உத்யோகத்தில் பெரும் பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் கடின உழைப்புத் தேவைப்டும்.

வியாபாரிகளைப் பொருத்தவரை, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் அதிக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. பொருட்கள் விற்ற பின் தொழிலில் முதல் போடுவதன் நஷ்டத்தை தவிர்க்க இயலும்.

குடும்பத் தலைவிகள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் தங்கள் சிக்கன நடவடிக்கைகளால் தங்கள் கணவனின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.

மாணவர்கள், சக மாணவர்களுடன் வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 6, 15, 24

அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி

தவிர்க்க வேண்டிய கிழமை: செவ்வாய், ஞாயிறு

அதிர்ஷ்டக்கல் : மரகதம்

அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, பச்சை

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்ச்

பரிகாரம்

சனி பகவானுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது எள் சாதம் செய்து சாமிக்கு படைத்து கோவிலில் உள்ள வயதானவர்களுக்கு கொடுத்து வருவதால் உங்கள் குடும்பத்தில் தடைப்பட்டிருந்த காரியங்கள் யாவும் நிச்சயம் நடைபெற வாய்ப்புண்டு.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே, நீங்கள் சிறு வயது முதலே பல அனுபவங்களைப் பெற்றிருப்பீர்கள். அதனால் பெரிய சிக்கலான விசயத்தினையும் சாதாரணமாக கையாள்வீர்கள். எல்லாம் நன்மைக்கே என்ற தத்துவம் தங்களுக்குத் தான் பொருந்தும்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள் தங்கள் சக ஊழியர்களிடம் தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்ல வேண்டாம், அவர்களுடன் அளவோடு பழகுவது நல்லது. மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அவர்கள் தங்களுக்கு நற்பொறுப்பினை தருவர்.

வியாபாரிகள் முதலீட்டுக்குத் தேவையான தொகையைப் பெற முயற்சி செய்தால் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். அந்த முதலீட்டால் லாபம் இரட்டிப்பாகும்.

குடும்பத் தலைவிகள், வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவ நாகரிகப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.

கலைஞர்கள் தங்கள் சக நடிகர்களுடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்பாலினரிடத்தில் அதிக நெருக்கம் வேண்டாம். உங்கள் உழைப்பினை போட்டால் தாங்கள் அதற்கேற்ற பலன் தாமதமானாலும் கிடைக்கும்.

கல்லூரி மற்றும் பள்ளிச் சுற்றுலா செல்லும் மாணவர்கள், நீர் நிலைகளின் அருகில் செல்லாமல் இருப்பது அவசியம். கொஞ்சம் பயம் எப்பொழுதும் இருப்பது நல்லது. அஜாக்கிரதையுடன் பயணம் செய்ய வேண்டாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: 5, 24

அதிர்ஷ்ட கிழமை: புதன், சனி

தவிர்க்க வேண்டிய கிழமை: செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்டக்கல்: வைரம்

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்ச்

பரிகாரம்

கை, கால் முடமானவர்களுக்கு உதவுதல் மற்றும் அவ்வப்போது வயது முதிர்ந்த பெரியவர்களை வணங்கி அவர்களின் நல்ஆசிகளைப் பெறுவதும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே... புரட்சி செய்யும் அளவிற்கு தங்கள் செயல் அமைந்திருக்கும். பார்த்தால் இவரா என தோன்றும் அளவிற்கு பகட்டில்லாதவர் நீங்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இயற்கையாகவே வீடு, நிலங்கள், ப்ளாட் போன்றவைகள் அமைந்து விடும்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்கள் மேலதிகாரிகளிடம் அமைதியாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. தேவையற்ற விசயங்களில் அனாவசியமாக தலையிடும் உங்கள் போக்கை தவிர்ப்பது அவசியம்.

வியாபாரிகள், வெளியூர் வியாபாரத்திற்காக அடிக்கடி செல்பவர்கள் பயணத்தின்போது தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்வது நல்லது.

குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தை பராமரிப்பதில் நிர்வாகத்திறமைப் பளிச்சிடும். மாமியார் மருமகள் உறவு சமாதானமாக செல்லும். மற்றபடி வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். கலைஞர்களுக்கு வெளியூர் பயணங்கள் அடிக்கடி ஏற்பட இடமுண்டு. அங்கு தங்கள் உடைமைகளான செல்போன் போன்ற பொருட்களில் கவனம் தேவை. உங்கள் திறமையை முழுமையாக வெளிபடுத்தக்கூடிய வாய்ப்பு தேடி வரும்.

மாணவர்கள், படிக்கவேண்டியதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காமல் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி வாகையை சூடலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: 9, 12, 27

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

தவிர்க்க வேண்டிய கிழமைகள்: புதன், சனி

அதிர்ஷ்டக்கல்: பவளம்

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: நீலம், பச்சை

பரிகாரம்

குல தெய்வ வழிபாட்டில் அக்கறை செலுத்துங்கள். அனாதை இல்லங்கள் முதியோர் காப்பகங்களுக்கு முடிந்த அளவிற்கு உதவுங்கள். முடிந்தால் அனுதினமும் சண்முக கவசம் படித்து வருவதும் பல நன்மைகளைப் பெற உதவும்.

மற்ற ராசிகளுக்கான பலன்களை அறிந்துகொள்ள.. https://www.dailythanthi.com/monthly-horoscope

கணித்தவர்: திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389

Tags:    

மேலும் செய்திகள்